கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் "கண்டைன்மெண்ட் ஜோன் மானிட்டரிங் ஸ்குவாட்" என்ற வாகனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேவையின்றி வெளியாட்கள் வருவதை தவிர்க்க பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, கோவையை பொருத்தவரை மாநகர காவல்துறை, மாநகராட்சி, சுகாதாரத்துறை என இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று கோவை மாநகரில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகர காவல்துறை சார்பில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது மாநகர காவல் ஆணையாளர் சுமித்திரன் உத்தரவின் பேரில் நான்கு உட்கோட்டை பிரிவுகளுக்கு ( கண்டைன்மெண்ட் ஜோன் மானிடரிங் ஸ்குவாட்) என்ற வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் காலை முதல் இரவு வரை ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். அதேபோல, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியாட்கள் வருவதை தவிர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில், இந்த விழிப்புணர்வு வாகனங்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், துணை ஆணையாளர் பாலாஜி சரவணன், உதவி ஆணையாளர் செட்ரிக் மனுவேல் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு காவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.