கோவை: கோவையில் காய்ச்சல் வந்ததால் கொரோனா வந்துவிட்டதாக கருதி சரக்கு ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் இருகூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அரசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கண்ணனுக்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது. தனக்கு கொரோனா காய்ச்சல் வந்து விட்டதாக நண்பர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி புலம்பியுள்ளார். மேலும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்த கண்ணன் மதியம் வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கண்ணனைத் தேடி உள்ளனர். அப்போது இருகூர் ரயில் நிலையம் பகுதியில் சரக்கு ரயில் மோதி வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து அங்கு சென்று பார்த்தபோது ரயில் மோதி இறந்தது உள்ளது கண்ணன் தான் என தெரியவந்தது.
கோவை நோக்கி வந்த சரக்கு ரயில் முன்பு கண்ணன் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா அச்சம் காரணமாக இளைஞர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.