கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ கொரோனா நிவாரணத்‌ தொகையாக ரூ.1000 பெற்றுக்கொள்ளலாம் - மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள்‌ கொரோனா நிவாரணத்‌ தொகை ரொக்கமாக ரூ.1000/- பெற்றுக்கொள்ளலாம்‌ மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள்‌ கொரோனா நிவாரணத்‌ தொகை ரொக்கமாக ரூ.1000/- பெற்றுக்கொள்ளலாம்‌ மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:-

கொரோனா வைரஸ்‌ (கோவிட்‌ -19) தொற்று பரவலைத்‌ தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்‌ ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்‌படுத்தப்பட்டுள்ள காலங்களில்‌ ஏழை எளிய மக்களுக்கு தேவையான நிவாரணம்‌ வழங்கியும்‌, பொருளாதார மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டும்‌ முனைப்புடன்‌ செயல்பட்டு வருகிறது.

தற்போது ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில்‌ மாற்றுத்திறனாளிகள்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டு தமிழ்நாட்டில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 லட்சம்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்க நிவாரண தொகையினை அவரவர்‌ வீட்டிலேயே வழங்க தமிழக முதல்வர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்‌.

அதனடிப்படையில், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்‌. நிவாரணத்‌ தொகை அந்தப்‌ பகுதியில்‌ உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள்‌ மூலம்‌ வழங்கப்படும்‌. நிவாரணத்‌ தொகையினை பெறுவதற்கு அசல்‌ தேசிய அடையாள அட்டை காண்பித்தும்‌ அதன்‌ நகலினை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்தும்‌ நிவாரணத்‌ தொகை ரூ.1000 பெற்றுக்கொள்ளலாம்‌. விநியோக படிவம்‌ பூர்த்தி செய்ய தேவையான விவரங்களை மாற்றுத்திறனாளிகள்‌/பாதுகாவலர்கள் அளிக்க வேண்டும்‌.

அளிக்கப்பட வேண்டிய விபரங்கள்‌ தனி நபர்‌ சம்மந்தப்பட்ட விவரம்‌, கல்வித்‌ தகுதி, வேலைவாய்ப்பு, தேசிய அடையாள அட்டை மற்றும்‌ (UDID) விண்ணப்ப நிலை ஆகியவை ஆகும்‌.

கிராம நிர்வாக அலுவலர்‌, நிவாரணத்‌ தொகை வழங்கிய விவரத்தினை தேசிய அடையாள அட்டையுடன்‌ கூடிய பதிவு புத்தகத்தில்‌ உதவிகள்‌ வழங்கும்‌ பக்கத்தில்‌ கோவிட்‌ 19 நிவாரணத்‌ தொகை ரூ.1000/- வழங்கப்பட்டது என்ற முத்திரையிட்டு கையொப்பம்‌ இடவேண்டும்‌. நிவாரணத்தொகை இரண்டு 500ரூபாய்‌ நோட்டுக்களாக வழங்கப்படும்‌. இந்த நிவாரண உதவித்தொகை 03.7.2020 முதல்‌ 10.7.2020 வரை காலை 10 மணி முதல்‌ 5.45 மணி வரை பயனாளிகளின்‌ இருப்பிடத்திற்கே நேரில்‌ வந்து வழங்கப்படும்‌.

நிவாரணத்தொகை பெறுவதில்‌ சிரமம்‌ ஏதேனும்‌ இருப்பின்‌ மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலர்‌ செல்போன்‌ எண்‌ 9499933471, 9443932998, 9488075115 மற்றும்‌ அலுவலக தொலைபேசி எண்‌ 0422-2380382ல்‌ தகவல் தெரிவிக்கலாம்‌, அத்துடன்‌ தொடர்புடைய வட்டாட்சியர்களிடமும்‌ தொலைபேசி மூலமும்‌ தெரிவிக்கலாம்‌.

1. கோவை வடக்கு - 9445000571

2. .கோவை தெற்கு - 9445000570

3. பேரூர் - 9443784143

4. மதுக்கரை - 8754390822

5. கிணத்துக்கடவு - 7373741406

6. பொள்ளாச்சி - 9445000576

7. ஆனைமலை - 9442145332

8. வால்பாறை - 9445000577

9. சூலூர் - 9600439524

10. அன்னூர் - 7708700974

11. மேட்டுப்பாளையம் - 9445000572

நிவாரண உதவித்தொகை கிடைக்கப்பெறவில்லை எனில்‌ மாநில மைய எண்‌ 18004250111ல்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

நிவாரணத்‌ தொகையினை தொடர்புடைய மாற்றுத்திறனாளிகள்‌ அல்லது அவர்களது பெற்றோர்‌ அல்லது தவிர்க்க இயலாத சூழ்நிலையில்‌ பாதுகாவலர்களிடம்‌ மட்டுமே வழங்கப்படும்‌.

தொடர்புடைய கிராமத்தினை சாராமலோ, இந்த மாவட்டத்தினை சாராத மாற்றுத்திறனாளிகள்‌, தங்கள்‌ விவரம்‌ மற்றும்‌ தேசிய அடையாள அட்டை மற்றும்‌ மருத்துவ சான்றினை பெற்று அவ்விவரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலருக்கு அனுப்பவேண்டும்‌. இவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள்‌ தனியாக வெளியிடப்படும்‌. அரசு தேவையான நிதியினை ஒதுக்கி உள்ளதால்‌ அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும்‌ நிவாரணத்‌ தொகை விடுபடாமல்‌ வழங்கப்படும்‌ என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...