கோவை: கோவையில் மதுக்கரை அருகே சிறுத்தை தாக்கி இரண்டு ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதி கேரள மாநிலம் வாளையாறு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான யானைகள், காட்டு மாடுகள், சிறுத்தைகள் உள்ளன. இந்த பகுதியில் குடியிருப்புகள் குறைவாக உள்ள நிலையில் மலையடிவாரத்திலுள்ள தோட்டங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது காணப்படும்.
இந்நிலையில், மதுக்கரை விநாயகர் கோவில் பகுதியில் மொய்தீன் என்பவர் வீட்டில் உள்ள ஆட்டுப் பட்டியில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த இரண்டு ஆடுகளை கடித்துக் கொன்றது. மேலும் இரண்டு ஆடுகளையும் கடித்ததில் அந்த ஆடுகள் காயத்துடன் உயிர் தப்பியது. ஆடுகளின் அலறல் சத்தத்தை கேட்ட வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது சிறுத்தை நின்றிருப்பதைக் கண்டு சத்தம் எழுப்பியதை தொடர்ந்து சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.
இதனையடுத்து, மதுக்கரை வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மதுக்கரை வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தை கடித்ததில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும், காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.