திருப்பூரில் காய்கறி விற்பனை செய்யும் தள்ளுவண்டி மீது கார் மோதிய சம்பவம் - தூக்கி எறியப்பட்ட தள்ளு வண்டியின் வீடியோ வைரல்!

திருப்பூர்: திருப்பூரில் காய்கறிகள் விற்பனை செய்யும் தள்ளு வண்டி மீது கார் மோதி நிற்காமல் சென்ற சம்பவத்தில் தூக்கி எறியப்பட்ட தள்ளு வண்டியின் வீடியோ சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


திருப்பூர்: திருப்பூரில் காய்கறிகள் விற்பனை செய்யும் தள்ளு வண்டி மீது கார் மோதி நிற்காமல் சென்ற சம்பவத்தில் தூக்கி எறியப்பட்ட தள்ளு வண்டியின் வீடியோ சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் திலிப்சர்மா (39). திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்திற்கு பியூசிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக பியூசிங் வேலை இல்லாத நிலையில் அருகில் உள்ள சந்தையில் சென்று தேங்காய் மற்றும் காய்கறிகள் மொத்தமாக வாங்கி வீடு வீடாக சென்று விற்பனை செய்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த ஞாயிறு அன்று கொங்கு மெயின் ரோடு எஸ்.வி.காலணி பகுதிக்கு காய்கறிகள் விற்பனைக்குச் சென்ற போது, எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்றுள்ளது. 

பின்னர் அங்கிருந்த மக்கள் திலிப்சர்மாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் இந்த விபத்து நடந்த போது பதிவான சி.சி.டிவி காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...