கோவை: கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனின் மகள், மருமகன் மற்றும் பேத்தி என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனின் மகள், மருமகன் மற்றும் பேத்தி என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த அம்மன் அர்ச்சுணன் இருந்து வருகிறார். இவரது வீடு செல்வபுரம் அருகேயுள்ள திருநகர் பகுதியில் உள்ளது.
இவரது மகள் குடும்பத்தினர் மதுரைக்கு சென்று கோவை திரும்பியுள்ளனர். இதையடுத்து, வீட்டில் உள்ள 9 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனின் மகள்(வயது 32), மருமகன்(வயது 39), பேத்தி(வயது 11) ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேசமயம், அம்மன் அர்ச்சுணன் உட்பட மீதமுள்ள 6 பேருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, மூவரும் கோவை இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.