நீலகிரியில் இயற்கையாக உயிரிழந்த முதியவரை கொரோனா தொற்றால் இறந்ததாக தவறான தகவல் பரப்பியவர் மீது போலீசார் வழக்குபதிவு!

நீலகிரி: நீலகிரியில் இயற்கையாக உயிரிழந்த முதியவரை கொரோனாவால் இறந்ததாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்பிய கார்த்திக் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரியில் இயற்கையாக உயிரிழந்த முதியவரை கொரோனாவால் இறந்ததாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்பிய கார்த்திக் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் நல்லப்பன் தெரு பகுதியில் வசித்த வருபவர் வீரப்பன், 89 வயதான இவர் கடந்த 22ம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது உடல் மருத்துவ அதிகாரிகளின் சோதனைக்குப் பின், எந்த நோய் தொற்றும் இல்லை என்று உறுதி செய்தபின் வெலிங்டன் மயானத்தில் அதிக கூட்டம் இல்லாமல் அரசு விதிகள் படி முழு பாதுகாப்பு கவசங்களுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே, இவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட வீடியோவை, கொரோனாவால் இறந்த முதியவர் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் புதைத்து விட்டதாக தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பியது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தவறான தகவலைப் பரப்பியதாக கார்த்திக் மற்றும் அட்மின்கள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், சமூக வளைதலங்களில் தவறான தகவலைப் பரப்பி, மக்களை பீதியடையச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...