தமிழக காவல்துறையில் முதல் முறையாக புகார் அளிக்க வருவோரிடம் ஜூம் செயலி மூலம் விசாரணை செய்யும் முறை கோவையில் அறிமுகம்!

கோவை: தமிழக காவல்துறையில் முதல் முறையாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புகார் அளிக்க வருவோரை ஜூம் செயலி மூலம் விசாரணை செய்யும் முறை கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: தமிழக காவல்துறையில் முதல் முறையாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புகார் அளிக்க வருவோரை ஜூம் செயலி மூலம் விசாரணை செய்யும் முறை கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்றோடு அரசு அலுவலகங்களுக்கு வருவதால் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை நோய் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவையில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அங்கு புகார் அளிக்க வருபவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்திக்க அனுமதி இல்லை. அதற்கு பதிலாக இன்று முதல் வரவேற்பு அறையில் இருந்து ஜூம் செயலி மூலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க சிறப்பு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இதற்காக லேப் டாப் பொருத்தப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் வீடியோ மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்று காலை முதல் இந்த புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழக காவல்துறையில் முதன் முறையாக ஜூம் செயலி மூலம் விசாரணை செய்யும் முறையை கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...