புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தொற்று நோயின் காரணியான SARS- CoV - 2 வைரசின் ஸ்ட்ரெய்ன் தனிமைப்படுத்தப்பட்டு, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அது தரப்பட்டு, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தடுப்பூசி, மருந்தை எதிர்நோக்கி உலகமே காத்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி மருந்து, அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மனிதச் சோதனை அனுமதி வழங்கியுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாக்ஸின் (COVAXIN):
இந்தியா கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பூசி, `கோவாக்ஸின் (COVAXIN)'. எபோலா வைரஸ், ஸிகா வைரஸ்(Zika) ஆகியவற்றுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை ஏற்கெனவே கண்டுபிடித்திருந்தது.
ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் முடிந்த நிலையில், மனிதர்களிடம் வரும் ஜூலை மாதம் முதல் மருந்தைச் செலுத்தி ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.