உலகை அச்சுறுத்தும் கொரோனாவை போல சீனாவில் உருவாகும் புதிய வைரஸ்..! மனிதர்களுக்கு பரவும் அபாயம் - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதியவகை வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதியவகை வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து இந்த வைரஸ் தொற்று காரணமாக தற்போது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு தற்போது வரை மருந்து ஏதும் கண்டறியப்படாத சூழலில், இதேபோன்ற மற்றொரு வைரஸ் வகை சீனாவில் பன்றிகளிடையே தற்போது பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய உயிர்க்கொல்லி வைரசான H1N1 வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரசுக்கு G4 EA H1N1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 வைரசின் மறுபணுத்தொடரை கொண்டுள்ள இந்த வைரசால் உடனடி ஆபத்து இல்லை என்றாலும், வருங்காலத்தில் இது மனிதர்கள் மத்தியில் பரவுவதற்கான ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த வைரஸ் மனிதர்களைப் பாதிக்க மிகவும் அவசியமான அனைத்து முக்கிய அடையாளங்களையும் கொண்டுள்ளது என்று திங்களன்று வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், சீனப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் தெரிவித்துள்ளன. 

இந்த காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகையே உலுக்கி பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...