வால்பாறையில் காட்டெருமை தாக்கி தேயிலை தோட்டத்தொழிலாளிகள் இருவர் படுகாயம்!

கோவை: வால்பாறையில் காட்டெருமை தாக்கி தேயிலை தோட்டத்தொழிலாளிகள் இருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை: வால்பாறையில் காட்டெருமை தாக்கி தேயிலை தோட்டத்தொழிலாளிகள் இருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகமாக உள்ளது. இங்கு ஏராளமான காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் கரடிகள் மற்றும் காட்டெருமைகள் உள்ளன.

இந்த வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. அப்போது மனித வன உயிரின மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்படுகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த அப்பர் பாரளை எஸ்டேட்டில் தொழிலாளியாக பணிபுரிபவர் வேல்முருகன். இவருடைய மனைவி மணிமேகலை (42) மற்றும் சகோதரி வள்ளியம்மாள் (45). இவர்கள் வீட்டின் அருகில் உள்ள 8ம் நம்பர் தேயிலை காட்டில் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த காட்டெருமை அவர்களை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர்கள் அலறியபடி கீழே விழுந்தனர். இதையடுத்து, சக தொழிலாளர்கள் கூச்சலிடவே காட்டெருமை அங்கிருந்து ஓடியது.

இதனை தொடர்ந்து, காயமடைந்த இருவரையும் மீட்டு தேயிலை தோட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இது தொடர்பாக வனத்துறையினரும் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காட்டு எருமை தாக்கியதில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...