கோவை முத்தண்ணன் குளம்‌ பகுதியில்‌ 100 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக்‌ கோரி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு!

கோவை: கோவை மாநகராட்சி 21வது வார்டு குமாரசாமி காலனி முத்தண்ணன் குளம்‌ பகுதியில்‌ தாழ்த்தப்பட்ட மக்களுடன்‌ இணைந்து வாழும்‌ சில பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்‌ பட்டா வழங்கக்‌ கோரி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



கோவை: கோவை மாநகராட்சி 21வது வார்டு குமாரசாமி காலனி முத்தண்ணன் குளம்‌ பகுதியில்‌ தாழ்த்தப்பட்ட மக்களுடன்‌ இணைந்து வாழும்‌ சில பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்‌ பட்டா வழங்கக்‌ கோரி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

இது தொடர்பாக தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :-

கோவை மாநகராட்சி 21 வார்டு குமாரசாமி காலனி முத்தண்ணன்‌ குளம்‌ ஏரிக்கு வெளியில்‌ நீர் வழித்தடத்தை ஆக்கிரமிக்காமல்‌ 100 ஆண்டுகளாக அப்பகுதியில் மக்கள்‌ வசித்து வருகின்றன.

30 ஆண்டுகளுக்கு மேல்‌ ஒரு நிலத்தில்‌ குடியிருப்பவர்களுக்கு நிலத்திற்கான அனுபவப்‌ பாத்தியம்‌ உள்ளது. அந்த வகையில்‌ 100 ஆண்டுகளாக வாழ்ந்து வரும்‌ பூர்வகுடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசமைப்பு சட்டத்தின்‌ படி வசிப்பிடத்தில்‌ பட்டா வழங்க வேண்டும்‌. ஆனால்‌ ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில்‌ இந்த பூர்வகுடி மக்களை அங்கிருந்து வெளியேற்றாமல்‌ இப்பகுதியிலேயே வாழும்‌ மக்களுக்கு பட்டா வழங்குமாறு தாழ்மையுடன்‌ கேட்டுக்‌ கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...