கோவையில் பறக்கும்‌ படை குழுவினர்கள்‌ மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கை‌ மற்றும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் விளக்கம்!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று தடுப்பு நடவடிக்கைகளின்‌ தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ உத்தரவின்படி மாநகராட்சியின்‌ சார்பில்‌ அமைக்கப்பட்டுள்ள பறக்கும்‌ படை குழுவினர்கள்‌ மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்‌ மற்றும்‌ பணிகள்‌ குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று தடுப்பு நடவடிக்கைகளின்‌ தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ உத்தரவின்படி மாநகராட்சியின்‌ சார்பில்‌ அமைக்கப்பட்டுள்ள பறக்கும்‌ படை குழுவினர்கள்‌ மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்‌ மற்றும்‌ பணிகள்‌ குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறக்கும்‌ படை குழுவினர்கள்‌ மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்‌ மற்றும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ தெரிவித்ததாவது:

அனைத்து வகையான கடைகள்‌, துணிக்கடைகள்‌, நகை கடைகள்‌ உட்பட அனைத்திலும் வாடிக்கையாளர்‌ பதிவேடு, தொலைபேசி எண்ணுடன்‌ பராமரிக்கப்பட்டு வருகிறதா எனவும்‌, கடைகளுக்கு வரும்‌ நுகர்வோர்கள்‌ மற்றும்‌ பணியாளா்கள்‌ அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்துள்ளனரா என்றும்‌, கிருமி நாசினி மூலம்‌ கைகளை நன்றாக கழுவிய பின்னர்‌ அனுமதிக்கப்படுகின்றனரா என்றும்‌ மற்றும்‌ தனிநபா்‌ இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா எனவும்‌ பறக்கும்‌ படையினர்‌ ஆய்வு மேற்கொண்டு அறிக்கையினை தினந்தோறும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ துணை ஆணையாளர்‌ ஆகியோரிடம்‌ சமாப்பிக்க வேண்டும்‌.

மேலும்‌, கடைகளை தினசரி ஆய்வு செய்து விதிகளை மீறும்‌ கடைகளுக்கு சீல்‌ வைக்கப்பட்ட மற்றும்‌ அபராதம்‌ விதிக்கப்பட்ட விபரங்கள்‌ குறித்தும்‌, பெருந்தொற்று கண்டறியப்பட்ட இடங்களில்‌ தினசரி கிருமி நாசினி தெளிக்கப்பட்டதா, பிளீச்சிங்‌ பவுடர்‌ மற்றும்‌ அன்றாடம்‌ தேவைப்படும்‌ பொருட்கள்‌ விநியோகப்பட்டதா என கண்காணித்தும்‌ அறிக்கை அளித்திட வேண்டும்‌. பெருந்தொற்று பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ கண்காணிப்பு பணியில்‌ ஈடுபடும்‌ அலுவலா்கள்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருக்கும்‌ நபர்கள்‌ வெளியே சென்றாலோ அல்லது புதிதாக வெளியூர்‌ மற்றும்‌ பிற மாவட்டங்களில்‌ இருந்து புலம்பெயர்ந்தவர்களின்‌ விபரங்களை அருகில்‌ வசிக்கும்‌ நபர்கள்‌ உடனே பறக்கும்‌ படை அதிகாரிகளுக்கு உடனே தகவல்‌ தெரிவித்திடவும்‌, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ தினசரி கிருமிநாசினி தெளிக்கப்பட்ட விபரங்களை பதிவேட்டில்‌ பதிவு செய்து பராமரிக்கப்படுகிறதா என சம்மந்தப்பட்ட பறக்கும்‌ படை அலுவலர்கள்‌ கண்காணித்திட வேண்டும்‌.

கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து கண்காணித்திட அலுவலர்களின் அலைபேசி விபரங்கள் மண்டல வாரியாக வடக்கு மண்டலம் வார்டு எண் 1, 2, 3, 4, 26, 27, 42, 43 ஆகியவை எஸ்.ஜான்சன் உதவி செயற்பொறியாளர் 9843027177, வார்டு எண். 38, 39, 40, 41, 44, 46, மற்றும் 47 ஆகியவை கே.ஜெயலட்சுமி உதவி செயற்பொறியாளர் 9442104122, வாடு எண்.28, 29, 30, 31, 55 ஆகியவை கார்த்திகேயன் உதவி வருவாய் அலுவலர் 9786631660, மேற்கு மண்டலம் வார்டு எண். 5, 6, 7, 8, 9, ஆகியவை ஆர்.புவனேஸ்வரி உதவி செயற்பொறியாளர் 9442104100, வாடு எணி்.10, 11, 12, 13, 14, ஆகியவை கு.சத்யா உதவி செயற்பொறியாளர் 9489903386 ஆகிய மண்டல வாரியாக பறக்கும் படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அறிக்கை மூலமாக தினசரி சமாப்பிக்க வேண்டும். 

அதேபோல வார்டு எண்.15, 16, 17, 18, 19 ஆகியவை கே.கருப்பாத்தாள் உதவி செயற்பொறியாளர் 9787715156, வார்டு எண். 20, 21, 22, 23, 24, ஆகியவை உமாதேவி உதவி செயற்பொறியாளர் 9442084560, கிழக்கு மண்டலம் வார்டு எண்.35, 36, 60, 61 ஆகியவை பா.பிரபாகரன் உதவி செயற்பொறியாளர் 9442104109, வார்டு எண்.65, 66, 62, 63, 64, ஆகியவை ஆர்.ஐசக் ஆர்தர் உதவி செயற்பொறியாளர் 9442104102, வார்டு எண்.67, 69, 75, 32, 33, 34 ஆகியவை ம.மணி உதவி செயற்பொறியாளர் 9443825816, வார்டு எண்.56, 57, 58, 59, ஆகியவை சத்தியபிரபா உதவி வருவாய் அலுவலா் 9940855643, தெற்கு மண்டலம் வார்டு எண்.85, 94, 95, 99, 96, 98 ஆகியவை சி.சுந்தாராஜன் உதவி செயற்பொறியாளர் 9442104110, வார்டு எண்.97, 92, 95, ஆகியவை பி.விமலா 9443799232, வார்டு எண்.86, 87, 88, 89, 90, 91 ஆகியவை எஸ்.ராமசாமி உதவி செயற்பொறியாளர் 9443941243, வார்டு எண்.76, 77, 78, 79, 100 ஆகியவை எஸ்.கே.சுகந்தி உதவி செயற்பொறியாளா் 9443799232, மத்திய மண்டலம் வார்டு எண்.70, 73, 74, 54, 80, 82, ஆகியவை கே.கருப்புசாமி உதவி செயற்பொறியாளர் 9443799219, வார்டு எண்.50, 51, 53, 45, 48, 49 ஆகியவை ஆ.செந்தில்பாஸகர் உதவி செயற்பொறியாளர் 9443799215, வார்டு எண்.25, 72, 68, 71 ஆகியவை எஸ்ல்.கணேஷ்குமார் நிர்வாக அலுவலர் 9442843008, வார்டு எண்.86, 84, 52, 81 ஆகியவை சு.கலாவதி, உதவி செயற்பொறியாளர் 9442104124 ஆகிய மண்டல வாரியாக பறக்கும் படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அறிக்கை மூலமாக தினசரி சமாப்பிக்க வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...