கோவை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் விஎம்சி மனோகரன் தலைமையில் சூலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் விஎம்சி மனோகரன் தலைமையில் சூலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய மாவட்டத் தலைவர் VMC மனோகரன், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் மத்திய அரசு 200 சதவீதத்திற்கு மேல் கலால் வரி விதித்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளது என்றார்.

நாடு முழுவதும் கொரானா நோய் தொற்று காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இருக்கின்ற நிலைமையில் ஏழ்மையை நோக்கி மக்கள் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மக்கள் மீது வரிச் சுமையை அத்தியாவசிய பொருளான பெட்ரோல், டீசல் உயர்வின் மூலம் ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
மேலும், கடந்த 22 நாட்களில் தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது எனவும் உடனடியாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் பெட்ரோல் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை பெருமளவு குறைக்க வேண்டும் என்று கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.