கோவை: கோவையில் கரடிவாவி அருகே இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப காலதாமதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவையில் பேரூர் அருகே கரடிவாவி தோட்டம் பகுதியில், இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப காலதாமதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் பெரியகருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (38). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆறு வருடங்களுக்கு முன் மனைவி இறந்த நிலையில், கோவை பேரூர் கரடிவாவி தோட்டம் பகுதியில் இயங்கி வரும் தனியார் சிப்ஸ் கம்பெனியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
குடிப்பழக்கம் உள்ள அவர் நேற்று அளவிற்கு அதிகமாக மது அருந்திய நிலையில், மாலை நேரம் தான் பணிபுரியும் கம்பெனிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் படுத்திருந்த நிலையில் உயிர் பிரிந்துள்ளது. பின்னர் இது குறித்து கம்பெனி உரிமையாளர் போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பிரதே பரிசோதனைக்கு கொண்டு செல்ல முதல் தகவல் அறிக்கை(FIR) கொடுக்க தாமதமானதாக கூறப்படுகிறது.
இதனால் இறந்த நபருடன் பணிபுரியும் தொழிலாளர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, எப்.ஐ.ஆர் கொடுக்கப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.