வால்பாறையில் பழங்குடியின வாலிபர் தூக்கிட்டு தற்கொலை! போலீசார் விசாரணை

கோவை: வால்பாறையில் பழங்குடியின வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறையில் பழங்குடியின வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் வனப்பகுதி மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு சேவையில் இயற்கை பாதுகாப்பு என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் காட்டு யானைகளின் நடமாட்டங்களை கண்டறிந்து குறுஞ்செய்தி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அனுப்பி வருகிறது.

இந்த நிறுவனத்தில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த கடுகு தடி புதூர் என்ற ஆதிவாசி பழங்குடி செட்டில்மென்டைச் சேர்ந்த குட்டுராஜ் என்பவரின் மகன் கார்த்திக் (24) பணியாற்றி வருகிறார். இவர் வால்பாறை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து நிறுவனத்திற்கு தகவல் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

வால்பாறையை அடுத்த பழைய வால்பாறை எஸ்டேட்டில் பகுதியில் அவர் வசித்து வரும் நிலையில், வழக்கம் போல் காலையில் கார்த்திக் வெளியே வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.



இதனை தொடர்ந்து, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. வால்பாறை உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமை காவலர் முஜீப் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்த போது வீட்டின் மேல் உள்ள குறுக்கு மரத்தில் கயிற்றை கட்டி தூக்கு போட்டு இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது.



இதையடுத்து, கார்த்திக்கின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடல்கூறு ஆய்வுக்கு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...