துபாயிலிருந்து கொச்சின் விமான நிலையம் வந்து தமிழகம் திரும்பிய 50க்கும் மேற்பட்டோர் வாளையார் பகுதியில் இ-பாஸ் இல்லாமல் தவிப்பு!

கோவை: துபாயிலிருந்து கொச்சின் விமான நிலையம் வந்து தமிழகம் திரும்பிய ஐம்பதுக்கும் மேற்பட்டோர் தமிழக கேரளா எல்லையான வாளையார் பகுதியில் இ-பாஸ் இல்லாமல் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தியதன் காரணமாக தவித்து வருகின்றனர்.


கோவை: துபாயிலிருந்து கொச்சின் விமான நிலையம் வந்து தமிழகம் திரும்பிய ஐம்பதுக்கும் மேற்பட்டோர் தமிழக கேரளா எல்லையான வாளையார் பகுதியில் இ-பாஸ் இல்லாமல் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தியதன் காரணமாக தவித்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் தவித்து வரும் தமிழர்களை மீட்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக துபாய், சவு‌தி, அரேபியா உள்பட பல்வேறு நாடுகளிலிருத்தும் பணிக்காக சென்ற தமிழர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

இதனிடையே, துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் தவித்து வந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விமானம் மூலம் நேற்று காலை கொச்சின் விமானம் நிலையம் வந்தடைந்தனர்.

இந்த நிலையில், தனி வாகனம் மூலம் தமிழக-கேரளா எல்லையான வாளையாருக்கு அனுப்பப்பட்ட நிலையில், வாளையாரிலுள்ள கேரளா சோதனைச் சாவடியை கடந்த ஐம்பதும் பேரும் தமிழக சோதனை சாவடிக்குள் செல்ல முற்பட்டனர். ஆனால், முறையான இ-பாஸ் இல்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அப்போது, இரண்டு நாட்களுக்கு முன் இ-பாஸ்க்கு விண்ணப்பித்தும் தற்போது வரை கிடைக்கவில்லை என்று தெரிவித்த அவர்கள், கடந்த இரண்டு நாட்களாக உணவு இல்லாமலும் கொண்டு வந்த பெட்டிகளுடன் தவித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.

வருவாய்த்துறையினர் அனுமதித்தால் தங்களது சொந்த ஊரில் தனிமைபடுத்திக்கொள்ள தயாராக இருப்பதாகவும், விதிமுறைகளை முறையாக பின்பற்றுவோம் என உறுதியளித்தனர். இதனிடையே மதுக்கரை வட்டாட்சியர் சரண்யா பேச்சுவார்த்தை மூலம் ஐந்து ஐந்து பேராக தங்களது சொந்த ஊருக்கு செல்ல அனுமதி வழங்கி உள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...