சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை எனவும் கட்டுப்பாடுகளை நீட்டிக்கவே முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை எனவும் கட்டுப்பாடுகளை நீட்டிக்கவே முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து இன்று (திங்கட்கிழமை) தலைமை செயலகத்தில் மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு மருத்துவ நிபுணர் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்தில் 80% பேருக்கு லேசான அறிகுறிகளுடன் தான் கொரோனா தொற்று இருப்பதால் பயப்பட வேண்டாம். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்கள் பயப்பட தேவையில்லை.
பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்திருப்பது நல்ல அறிகுறி எனவும் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை போல திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் பரிசோதனைகளை அதிகரிக்க பரிந்துரைக்க செய்துள்ளோம். சுவை, மணம் உணராவிட்டால் அவர்கள் உடனடியாக காய்ச்சல் மையத்திற்கு சென்று தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். கொரோனா அறிகுறி இருந்தால், உடனே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பொது முடக்கத்தை நீட்டிக்க முதலைமைச்சருக்கு பரிந்துரைக்கவில்லை. ஆனால், கட்டுப்பாடுகளை நீட்டிக்க பரிந்துரை செய்துள்ளோம். பொதுப்போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
தமிழகத்தில் பொது முடக்கம் நீடிக்குமா? கட்டுப்பாடுகள் தீவிரமாகுமா என்பதை அரசுதான் முடிவெடுக்கும் என்று கூறிய மருத்துவக்குழு, ஊரடங்கு மட்டுமே கொரோனா தொற்றுக்கு தீர்வல்ல. தொடர்ந்து பொது முடக்கத்தை நீட்டித்து கொண்டிருக்க இயலாது. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு நீட்டிக்க தேவையில்லை என மருத்துவக்குழு தரப்பில் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.