திருப்பூர்: திருப்பூரில் இதுவரை 16,900 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தாலுகா அளவில் சிறப்பு மையங்களை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி கோபால் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க தமிழக அரசால் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியாக கோபால் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று திருப்பூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாம்களை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 150 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் சில பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதேபோல, திருப்பூரில் இதுவரை நான்கு இடங்களில் தனிமைப்படுத்துதல் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை விரிவுபடுத்தும் வகையில் தாலுகா அளவிலும் முகாம்களை அமைத்து 1,500 முதல் 2,000 படுக்கைகள் வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், திருப்பூரில் இதுவரை 16 ஆயிரத்து 900 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் அவை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார். மேலும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மாநகர ஆணையாளர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.