கோவை: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரக்கூடிய கூட்டுறவு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மேட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உள்ள அர்பன் கூட்டுறவு வங்கி முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் கடனுதவி பாதிக்கப்படுவதுடன் மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிட முயல்வதாக குற்றம்சாட்டி கண்டன கோசங்களை எழுப்பினர்.
மேலும், கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியுடன் இணைப்பதால் வட மாநில தொழிலாளர்களுக்கே வேலைவாய்ப்பு இருக்கும் எனவும் இது தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பினை கெடுக்கும் செயல். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.