கோவை: வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதி வால்பாறை நகர கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் வால்பாறை வி அமீது தலைமையில் தொழிலாளர்களுக்கு முகக் கவசம் வழங்கி கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருத்தல் ஆகியவற்றை தொழிலாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் வால்பாறை நகர கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் வால்பாறை அமீது, பொன் கணேஷ், சலாவுதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.