மருத்துவக்குழு வராததால், சிறுமுகை வனப்பகுதியில் உயிருக்கு போராடி வரும் யானை..!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடும் யானை_ யானைக்கு சிகிச்சை அளிக்க இதுவரை மருத்துவக்குழு வரவில்லை என்பதால் ஆபத்தான நிலையில் யானை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடும் யானை_ யானைக்கு சிகிச்சை அளிக்க இதுவரை மருத்துவக்குழு வரவில்லை என்பதால் ஆபத்தான நிலையில் யானை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதிக்குட்பட்ட பெத்திகுட்டை பகுதியில் தண்ணீர் தேடி வந்த ஒற்றை ஆண் காட்டுயானை ஒன்று உடல் நலக்குறறைவு ஏற்பட்டு பவானி சாகர் நீர் தேக்கபகுதியில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடி வருவதாக, அப் பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறைக்கு தகவல் அளித்தனர்,

இதனை தொடர்ந்து அங்கு சென்ற அந்த யானையின் நிலையை அறிந்து கோவை மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அந்த யானை மிகவும் உடல் பலவீணமடைந்துள்ளதால் கீழே விழுந்த அந்த யானையால் மீண்டும் எழ முடியாமல் தவித்து வருகிறது, வனத்துறையினர் அங்கு முகாமிட்டு யானையின் நடவடிக்கை குறித்து கண்கானித்து வருகின்றனர்,



ஆனாலும், உடல் நலம் குன்றிய அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு அழைக்கபட்டும் இதுவரை மருத்துவக்குழு வராததால் அந்த யானை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது, என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பாதிக்கபட்ட யானைக்கு 20 வயது இருக்கும் என தெரிவித்த வனத்துறையினர் தற்போது யானையின் சோர்வை போக்க பழங்களை யானைக்கு கொடுத்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதகாலத்தில் மட்டும் சிறுமுகை வனப்பகுதியில் மூன்று யானைகள் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு யானை நோய்வாய்பட்டு இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என கவலை அடைந்துள்ள வன ஆர்வலர்கள் இனியும் தாமதிக்காமல் சிறுமுகை வனப்பகுதிக்கு முக்கியத்துவம் அளித்து உயிரிழக்கும் யானைகளுக்கு என்ன நோய் என கண்டறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...