தேன் எடுக்க சென்ற போது பரிதாபம், கோவை சாடிவயல் அருகே யானை தாக்கி ஒருவர் பலி...!
கோவை: கோவை மாவட்டம் சாடிவயல் அருகே உள்ளது கல்கொத்திபதி மலை கிராமம். இங்கு 100 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் கூலி வேலையாக இருந்தாலும், அவ்வப்போது மலைப்பகுதியில் சென்று தேன் எடுத்து வந்து விற்பனை செய்வது வழக்கம்.
தற்போது, மலைப்பகுதியில் தேன் அதிகமாக கிடைப்பதால், கல்கொத்திபதி பகுதியில் உள்ள ஆண்கள்,மலைகளின் உச்சிக்கு சென்று தேன் எடுத்து வருகின்றனர்.
இப்படி, இன்று காலை கல்கொத்திபதி கிராமத்தில் இருந்து 6 பேர் கொண்ட குழுவினர் தேன் எடுப்பதற்காக மலைப் பகுதிக்கு சென்றுள்ளனர். தேன் எடுத்து விட்டு மாலை வீடு திரும்பிய நிலையில், கல்கொத்திபதி அருகே வரும் போது குட்டியுடன் நின்றுகொண்டிருந்த பெண் யானை திடீரென இவர்களை துரத்தி உள்ளது.
இதில் பாபு என்பவர் யானையிடம் சிக்கி கொண்ட நிலையில் மற்ற ஐந்து பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து, தப்பித்து கிராமத்துக்கு சென்ற அவர்கள் நடந்தவற்றை கூறி, ஊர் மக்களை அழைத்துக் கொண்டு பாபுவை காப்பாற்ற மீண்டும் மலை பகுதிக்கு சென்றனர்.
அப்போது, அங்கு படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாபுவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக பாபு உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்த பாபுவுக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில்,இவர் கோவை கோவை, போளுவாம்பட்டி, வன கோட்டத்தில்தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போளுவாம்பட்டி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.