கோவை: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி நடத்தி வரும் சங்கீதா மருத்துவமனை கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டது.
கோவை: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி நடத்தி வரும் சங்கீதா மருத்துவமனை கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி சங்கீதா மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். அவரது மனைவி மருத்துவமனை நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், இங்கு நேற்று முன்தினம் சிகிச்சைக்காக வந்த நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியானது. இதில் உயிரிழந்த நபருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

மேலும், மருத்துவமனை நிர்வாகத்தை கவனித்து வரும் கிருஷ்ணசாமியின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதுடன் அங்கு செல்லும் பாதையையும் சுகாதாரத் துறையினர் அடைத்தனர்.