கோவை: கோவை பெரியகடை வீதியில் இயங்கி வரும் பிரபல மளிகை அங்காடியான மதினா ஸ்டோர்ஸ் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடை மூடப்பட்டது.
கோவை: கோவை பெரியகடை வீதியில் இயங்கி வரும் பிரபல மளிகை அங்காடியான மதினா ஸ்டோர்ஸ் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடை மூடப்பட்டது.
கோவையின் பெரிய கடை வீதியில் மதினா ஸ்டோர்ஸ் என்ற பிரபல பல்பொருள் விற்பனை அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டு அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இந்த அங்காடிக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில் அங்கு பணியாற்றிய ஊழியருக்கு தொற்று உறுதியானதால் அந்த கடைக்குச் சென்று வந்த வாடிக்கையாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மேலும், கொரோனா தொற்று சமீப நாட்களாக கோவையில் அதிகரித்து வரும் நிலையில் இந்த கடை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் விற்பனை அங்காடியில் பணியாற்றி வந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் வளாகத்தில் உள்ள உணவு விடுதிக்கு இந்த பல்பொருள் அங்காடியில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.