திருப்பூர்: திருப்பூர் காவல் உதவி ஆய்வாளரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மூடப்பட்டது.

சென்னையில் இருந்து திருப்பூர் வந்த சென்னை சிட்டி போலீசில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அவர் திருப்பூர் வந்த நிலையில் அவருக்கு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரின் கணவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுவதால், அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், திருப்பூர் வடக்கு காவல் நிலையம் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதாலும் காவலர்களிடையே தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. இதனால், திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.