பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு..! காவலர்கள் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்ய மறுக்கும் முடிவை வாபஸ் வாங்கிய பால் முகவர்கள் சங்கம்!

சென்னை: காவலர்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு நாளை முதல் பால் விநியோகம் கிடையாது என்ற முடிவை தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் திரும்பப்பெற்றுள்ளது

சென்னை: காவலர்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு நாளை முதல் பால் விநியோகம் கிடையாது என்ற முடிவை தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் திரும்பப்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை மக்கள் சரியாக பின்பற்ற அனைத்து இடங்களில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

அதன்படி, ஊரடங்கு உத்தரவுகளை மீறி வெளியே சுற்றுபவர்களை போலீசார் தண்டிக்கும் அதே சமயம், எந்த தவறும் செய்யாத சாதாரண வியாபாரிகளும், மக்களும் கூட போலீசாரின் நடவடிக்கையில் பாதிக்கப்படுகின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான பாலை கொண்டு செல்லும் முகவர்களை காவல்துறையினர் தொடர்ந்து இடையூறு செய்து வருவதாகவும், வாகனங்களை பறிமுதல் செய்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

மேலும் பால் விற்பனையகங்களையும் மூட சொல்லி அடிக்கடி போலீசார் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். போலீசாரின் இந்த செயலை கண்டித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் நூதனமான போராட்டத்தை அறிவித்தது. 

அதன்படி இன்று முதல் காவல்துறையினர் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு பால் விநியோகம் செய்யப்படாது என்று தெரிவித்தனர். அதன் பின்னர் தொலைப்பேசி மூலம் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகள் இந்த முடிவை கைவிட வைத்துள்ளது. 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி, பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால் காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்ய மறுக்கும் முடிவு கைவிடப்படுவதாக தெரிவித்துள்ளார். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...