இந்திய சீன எல்லையில் தேசத்திற்காக உயிர் நீத்த 20 ராணுவ வீரர்களுக்கு கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

கோவை: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் தேசத்திற்காக உயிர் நீத்த 20 ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் தேசத்திற்காக உயிர் நீத்த 20 ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 



கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குறிப்பாக இருகூர், சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய சீன எல்லையில் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்ததாக சொல்லப்பட்டு வருகிறது. அதன் உண்மைத்தன்மையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இந்திய நிலப் பகுதிக்குள் சீன ராணுவம் நுழைந்து ஏழு வாரங்களாக மத்திய அரசு மௌனம் காத்தும், ஆயுதங்கள் இன்றி நமது ராணுவ வீரர்களை அனுப்பியதும் நிர்வாக திறமையை காட்டுகிறது. 

ஆகவே, இந்திய நிலத்தை மத்திய அரசு சீதனமாக மீட்டு சீன ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...