திருப்பூர் அருகே பஞ்சு குடோனில் தீ விபத்து; 4 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

திருப்பூர்: திருப்பூர் அருகே பஞ்சு குடோனில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரித்து சேதமடைந்துள்ளது. மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே பஞ்சு குடோனில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரித்து சேதமடைந்துள்ளது. மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

திருப்பூர் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர் (54). இவர் காசிபாளையம் அருகே பனியன் வேஸ்ட் துணிகளை பஞ்சாக மாற்றும் குடோனை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.



இந்த நிலையில், இன்று மாலை பஞ்சு பொதியில் இருந்து புகை வந்ததை கண்ட பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால், பஞ்சு பொதியில் தீ வேகமாக பரவியதால் தொழிலாளர்கள் வெளியே தப்பி ஓடி வந்தனர்.



வேகமாக பரவிய தீ அருகில் இருந்த இரண்டு பஞ்சு குடோன்களுக்கும் பரவியதால் தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியது.



இது குறித்து தகவலறிந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த திருப்பூர் வடக்கு, தெற்கு தீயணைப்பு வீரர்கள் 10 தண்ணீர் லாரிகள் உதவியுடன் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரித்து சேதமடைந்தன என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஊரக காவல்துறையினர், மின்கசிவு மூலம் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...