வால்பாறையிலிருந்து கோவைக்கு வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறையிலிருந்து கோவைக்கு வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மைல்கல்லைச் சேர்ந்த 63 வயது ஆண் ஒருவர் மானிக்கா தேயிலை தோட்டத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த 1ம் தேதி வந்து 12ம் தேதி வரை தங்கியிருந்து விட்டு திரும்பி கோவைக்கு சென்று விட்டார். அங்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, வால்பாறையில் அவர் தங்கியிருந்த அவருடைய உறவினர் வீட்டிற்கு சென்ற கொரோனா தடுப்பு குழுவினர் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் தலைமையிலான குழுவினர் அவர் தங்கியிருந்த உறவினர் வீடு, அவருடன் தொடர்பில் இருந்த குழந்தை உட்பட 12 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. உறவினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் சளி, இரத்த மாதிரிகளை சேகரித்து பரோசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள ஹோட்டல் கடைகள், குடியிருப்பு பகுதிகள் தனிமை படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ளவர்கள் 14 நாட்களுக்கு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.