கோவை: சென்னையில் இருந்து பொள்ளாச்சியில் உள்ள அரசு மதுபான கிடங்குக்கு மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி ஓட்டுநருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மதுபாட்டில்களை ஏற்றுக்கொண்டு பொள்ளாச்சி மதுபான குடோனுக்கு வந்த லாரி ஓட்டுனருக்கு காய்ச்சல் இருந்ததால் அவரை வருவாய்த்துறையினர் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
இதையடுத்து, அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும், டாஸ்மாக் குடோன் காவலாளி உள்ளிட்டோருக்கு மருத்துவ பரிசோதனை தற்போது நடைபெற்றுள்ளது. அதேபோல, பொள்ளாச்சி குடோனை சுற்றியுள்ள கடைகளுக்கு சம்மந்தப்பட்ட ஓட்டுனர் சென்று வந்ததால் அந்த கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.