சாத்தான்குளம்‌ சம்பவத்தில்‌ மரணமடைந்த ஜெயராஜ்‌, பென்னிக்ஸ்‌ குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில்‌ ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

தூத்துக்குடி: சாத்தான்குளம்‌ சம்பவத்தில்‌ மரணமடைந்த ஜெயராஜ்‌, பென்னிக்ஸ்‌ குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ 25,00,000/- ரூபாய்‌ குடும்பநல நிதியுதவி வழங்கப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: சாத்தான்குளம்‌ சம்பவத்தில்‌ மரணமடைந்த ஜெயராஜ்‌, பென்னிக்ஸ்‌ குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ 25,00,000/- ரூபாய்‌ குடும்பநல நிதியுதவி வழங்கப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

தூத்துக்குடி மாவட்டம்‌ சாத்தான்குளத்தில்‌ காவல்‌ துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்‌ செல்லப்பட்ட ஜெயராஜ்‌ மற்றும்‌ அவரது மகன்‌ பென்னிக்ஸ்‌ ஆகியோர்‌ மரணமடைந்த துயர நிகழ்வு துரதிருஷ்டவசமானதும்‌, மிகவும்‌ வேதனைக்குரியதுமாகும்‌.

இத்தகைய வேதனை அளிக்கும்‌ சம்பவங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும்‌ அனுமதிக்காது. குடும்பத்தின்‌ இரண்டு தூண்களாய்‌ இருந்த தந்தையையும்‌, மகனையும்‌ இழந்து வாடும்‌ அக்குடும்பத்தினருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ தனது ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழக மக்களின்‌ அடைக்கலமாகவும்‌. அரணாகவும்‌ திகழும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய்‌ குடும்பநல நிதியுதவி வழங்கப்படும்‌.

தமிழ்‌நாட்டு மக்களின்‌ நலனுக்காகவே அல்லும் பகலும்‌ அயராது உழைத்து வரும்‌ அம்மா அவர்களின்‌ நல்லாசியோடு செயல்பட்டு வரும்‌ கழக அரசும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகமும்‌ என்றென்றும்‌ மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில்‌ பணியாற்றி, நீதியை நிலைநாட்டும்‌ என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...