தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் சிறையில் வியாபாரிகள் தந்தை, மகன் இறந்த விவகாரத்தில் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், திடீரென அடுத்தடுத்த உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக் கைதிகள் உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெயராஜ், பென்னிக்ஸுக்கு நடந்த கொடுமை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர்களது குடும்பத்திற்கு நீதி கிடைக்க அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.