சென்னை: சென்னை மாநகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கையர் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

சென்னை மாநகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கையர் #COVID19 தொற்று தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொருவரும் தினமும் 300 வீடுகளுக்குச் சென்று நோய்த்தொற்று அறிகுறி குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர் என்ற செய்தியை TNCoronawarriors என்னும் ஹேஷ்டேகைப் பயன்படுத்திப் பகிர்ந்துள்ளார்.
ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பாகவே, சென்னையில் திருநங்கைகள் கலைக்குழுக்கள் சார்பாக, போலீசாரது ஒத்துழைப்புடன் கொரோனா விழிப்புணர்வு வீதி நடனங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.