கோவை: கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் கல்வான் பகுதியில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்திய- சீனா ராணுவத்தினர் இடையே கடந்த ஜூன் 15ம் தேதி இரவு பல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய படையினர் கொல்லப்பட்டனர்.
நாட்டிற்காக வீரமரணமடைந்த இந்த ராணுவ வீரர்களுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர மாவட்ட காங்கிரஸார் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலை அருகில் கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்கள் உருவப்படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
மேற்கு மண்டல மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.