திருப்பூர்: திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பூர்: திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தினசரி மார்க்கெட் மற்றும் டவுன்ஹால் மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இன்று திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருடன் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பூரின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி அவற்றை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.