நீலகிரி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
நீலகிரி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த இரு வணிகர்களின் மரணத்திற்கு காவல்துறையினர் தான் காரணம் என்று கூறி காவல்துறையை கண்டித்து வணிகர் சங்கங்கள் இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, உதகை குன்னூரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வரும் நிலையில், இன்று வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நடைபெற்ற ஒரு நாள் முழு அடைப்பிற்கு 75 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு காணப்பட்டன.

அதேசமயம், அனைத்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்காமல் கடைகளை வழக்கம் போல் திறந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.