சாத்தான்குளத்தில் வியாபாரிகள் தந்தை, மகன் போலீஸ் காவலில் இறந்த சம்பவத்தை கண்டித்து வால்பாறையில் முழு கடையடைப்பு!

கோவை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இரண்டு வியாபாரிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இறந்த சம்பவத்தை கண்டித்து வால்பாறை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

கோவை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இரண்டு வியாபாரிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இறந்த சம்பவத்தை கண்டித்து வால்பாறை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தை கண்டித்து இன்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்பு நடத்த அழைப்பு விடப்பட்டிருந்தது. 

இதனை தொடர்ந்து, வால்பாறை பகுதியிலுள்ள மளிகை கடைகள், ஹோட்டல்கள், தேநீர் கடைகள் பெட்டிக்கடைகள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பேருந்துகள், டாக்சிகள் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியினை மேற்கொண்டுள்ளனர். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...