சாத்தான்குளத்தில் சிறையில் தந்தை, மகன் இறந்த விவகாரம்: கோவையில் இன்று வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம்!

கோவை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இரண்டு வியாபாரிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இறந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் இன்று வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.


கோவை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறப்பை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த இருவரின் மரணத்திற்கு காவல்துறையினர் தான் காரணம் என்று அவர்கள் குடும்பத்தார் கூறி வரும்.நிலையில்,  ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் இறந்ததை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 26) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, நெல்லையில் நேற்று  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முழு கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் இன்று வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள் காலை 11 மணி வரை அடைக்கப்பட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இதனிடையே, சாத்தான்குளத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...