சிறுமுகை வனத்தில் பெண் காட்டுயானை உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை

கோவை: கோவையில் இன்று 6 பெண்கள் உட்பட 28 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


கோவை: சிறுமுகை பவானி நீர் தேக்க வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பெண் காட்டுயானை உயிரிழந்ததையடுத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மூலையூர் சராகத்திலிருந்து, பவானி சாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பவானி அணையின் நீர் தேக்க பகுதியான மயில் மொக்கை சராக பகுதியில், துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அந்த பகுதிகளில் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அங்கு அழுகிய நிலையில் பெண் காட்டுயானை ஒன்று இறந்த நிலையில் இருப்பதை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பின்னர் இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கபட்ட நிலையில் , நிகழ்விடத்திற்கு சென்ற அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார், தலைமையிலான மருத்துவக்குழுவினர் உயிரிழந்த யானையின் உடலை உடற்கூராய்வு நடத்தினர். அதில், உயிரிழந்த யானை பெண் யானை என்றும் , இறந்து 8 முதல் 10 நாட்கள் ஆனதால் உடல் பாகம் முற்றிலும் அழுகி சிதைந்து காணப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் உடல் நலக்குறைவால் யானை உயிரிழந்திருக்க நேரிடும் என தெரிவித்த மருத்துவக்குழுவினர், அதன் உடலின் சில பாகங்களை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர். பின்னர் மீதமிருந்த யானையின் உடலை பிற ஊண் உண்ணிகளுக்காக அப்படியே வனத்தினுள் வனத்துறையினர் விட்டு வந்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...