கோவை காந்திபுரத்தில் பேருந்து பயணிகளுக்கு கொரோனா பரவலை தடுக்க கடைபிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் அறிவுரை!

கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு கொரோனா பரவலை தடுக்க கடைபிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.

கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு கொரோனா பரவலை தடுக்க கடைபிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதையடுத்து காந்திபுரம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளிடம் கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த கடை வியாபாரிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். அப்போது உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...