கொரோனா அச்சுறுத்தல்: குன்னூர் அருகே கொலக்கம்பை காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் சீல் வைப்பு!

நீலகிரி: குன்னூர் அருகில் உள்ள கொலக்கம்பை காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் ஒரே நாளில் கொரோனா பரவல் காரணமாக சீல் வைக்கப்பட்டதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

நீலகிரி: குன்னூர் அருகில் உள்ள கொலக்கம்பை காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் ஒரே நாளில் கொரோனா பரவல் காரணமாக சீல் வைக்கப்பட்டதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.



நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள கொலக்கம்பை காவல் நிலையத்தில் பணிபுரியும் 7 காவலர்கள் மற்றும் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருவரையும் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் உட்படுத்தினர்.

இந்த நிலையில், இன்று இவர்கள் அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து கொலக்கம்பை காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு கெந்தளா என்ற பகுதிக்கு மாற்றப்பட்டது.

இதேபோல, குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முகப்பு வாயிலும் மூடி சீல் வைக்கப்பட்டது. கொலக்கம்பை தூதூர்மட்டம் பகுதியில் ஏற்கனவே சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்து காவலர் பணிக்கு வந்த 7 காவலர்கள் மற்றும் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த தாலுக்கா அலுவலக அதிகாரியையும் சுகாதார அதிகாரிகள் அழைத்துச் சென்றதால் கொலக்கம்பை காவல் நிலையம் மற்றும் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...