கோவையில் ரூ.238.40 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம்‌ முதலமைச்சர்‌ தொடங்கி வைத்தார்‌!

கோவை: கோவை மாவட்டத்தில் ரூ.238.40 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம்‌ முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌.

கோவை: கோவை: கோவை மாவட்டத்தில் ரூ.238.40 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம்‌ முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் 238.40 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட புதிய திட்டங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

சேலத்தில் இருந்து கார் மூலம் கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 166 கோடி மதிப்பீட்டில் பில்லூர் 3வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் கோவை மாவட்டத்தில் கபசுர குடிநீர், ஜிங்க் மாத்திரை, வைட்டமின் மாத்திரைகள் அடங்கிய நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகத்தை பத்து லட்சம் குடும்பங்களுக்கு வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் பழனிச்சாமி, கூட்ட அரங்கில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், கோவை உக்கடம் பெரிய குளத்தில் ரூ.39.74 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளத்தின் ஒரு பகுதியில் செய்து முடிக்கப்பட்ட பணிகள், வாலாங்குளத்தின் ஒரு பகுதியில் 25.83 கோடி ரூபாயில் செய்யப்பட்ட பணிகள் ஆகியவற்றை வீடியோ கான்பிரசிங் முறையில் திறந்து வைத்தார். மேலும் 2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை காணொலி காட்சி முறையில் திறந்து வைக்கப்பட்டது.

இதே போல, ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரூ. 2.70 கோடி மதிப்பீட்டில் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டப்பட்ட கட்டிடம் ஆகியவற்றையும் வீடியோ கான்பிரசிங் முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, கோவையில் உள்ள கொடிசியா, இந்திய தொழில் வர்த்தக சபை, சைமா, சிஸ்பா உட்பட 15 தொழில் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், கொரோனாவால் ஏற்பட்ட தொழில் நெருக்கடி, மின் கட்டணம் உட்பட தொழில் முனைவோருக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொழில் அமைப்பு நிர்வாகிகள் முதலமைச்சரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடனும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...