கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் சாத்தான்குளத்தில் இறந்த வியாபாரிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறைக்கும் வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் மர்மமான முறையில் தந்தை, மகன் என இரு வியாபாரிகள் இறந்தனர்.
இந்த நிலையில், வால்பாறை காந்திசிலை வளாகத்தில் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் இறந்து போன வியாபாரிகள் தந்தை ஜெபராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பேசிய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், இறந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நஷ்ட ஈட்டுத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். அந்த தொகையை சம்பந்தப்பட்ட காவல் துறையினரிடம் வசூலிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
இந்த நிகழ்வில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் குசலவன், டிரீட் ஜெபராஜ், ஷாஜூ, சண்முகம் ரவி லாலு உட்பட ஏராளமான வியாபாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், வால்பாறை பகுதியில் நாளை கடையடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.