திருப்பூரில் பனியன் குடோன்கள் மற்றும் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை..! 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ரூ.500 வீதம் அபராதம்!

திருப்பூர்: திருப்பூரில் பெரும்பாலான பனியன் குடோன்கள் மற்றும் கடைகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் பெரும்பாலான பனியன் குடோன்கள் மற்றும் கடைகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.



தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருப்பூரில் உள்ள பெரும்பாலான இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் இருந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர். 

இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறை சார்பில் திருப்பூர் காதர் பேட்டை, குமரன் சாலை உள்ளிட்ட பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, பெரும்பாலான பனியன் குடோன்கள் மற்றும் கடைகளில் கடையின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி இருந்த தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு 500 ரூபாய் விதம் அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும், தனி நபர் மற்றும் இரு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு 100 ரூபாய் விதம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...