கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் துவங்கியது.

இதற்கு முன்னதாக பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் உக்கடம் குளம், வாலாங்குளம், ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட பூங்காக்களை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, அமைச்சர் எஸ் பி வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், ஆறுக்குட்டி, அம்மன் அர்ச்சுனன், கஸ்தூரி வாசு, வி.பி கந்தசாமி, எட்டிமடை சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக முதலமைச்சர் கோவை வருகையையொட்டி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.