சென்னை: சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் சிறையில் மரணம் அடைந்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) ஒருநாள் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீசார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தை அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் கண்டித்து வருகின்றனர்.
இதனிடையே, இருவரும் வணிகர்கள் என்பதால் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வணிகர் சங்கம் களத்தில் இறங்கியுள்ளன.
இந்த நிலையில், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் சிறையில் மரணம் அடைந்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (26-6-2020) ஒருநாள் கடையடைப்பும், அனைத்து வணிகர் இல்லங்களில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி பிராத்திக்குமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 30ம் தேதி தமிழக அனைத்து காவலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் அறப்போராட்ட நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழக அரசு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனை ஒரு கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.