வால்பாறை: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வால்பாறையில், கொரோனா பரவலை தடுக்க அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தானியங்கி கிருமி நாசினி இயந்திரத்தை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.
வால்பாறை: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வால்பாறையில், கொரோனா பரவலை தடுக்க அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தானியங்கி கிருமி நாசினி இயந்திரத்தை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில் வால்பாறை பகுதியை கொரோனா இல்லாத பகுதியாக்க வேண்டும் என்பதற்காக, சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரக்கூட்டத்தில், சிறுகுன்றா தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலை பகுதிகளில் உள்ள தொழிலாளர்களிடையே முகக் கவசம் அணிவது, அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றுவது குறித்து வலியுறுத்தப்பட்டது.
மேலும், தனது சொந்த செலவில் வால்பாறை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தானியங்கி கிருமி நாசினி வழங்கும் இயந்திரத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு , தொழிற்சங்க தலைவரும் தமிழ்நாடு தொழிலாளர் வீட்டு வசதி குழு உறுப்பினருமான வால்பாறை அமீது , வாசு நகரச் செயலாளர் மயில் கணேசன் ,பொன் கணேஷ் சலாவுதீன் , கட்சி நிர்வாகிகள் மருத்துவர்கள் ,செவிலியர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.