கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை, ஜூன் 25 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை, ஜூன் 25 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நாளை கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய கட்டிடங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அத்திக்கடவு அவிநாசி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
மேலும், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
முதல் தள கூட்ட அரங்கில் தொழில் முதலீட்டாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, உக்கடம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைப்பு திட்டத்தை ஆய்வு மேற்கொண்ட பின்னர் சாலை வழியாக சேலம் செல்கிறார். இதில் மாற்றம் இருக்கக்கூடும் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழக முதலமைச்சர் கோவை வருகையையொட்டி காவல்துறை தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.