கோவை: கோவையில் இன்று ஒரு வயது ஆண் குழந்தை, ஊட்டி செவிலியர் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும்.நிலையில், இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
2 குழந்தைகள், 5 பெண்கள் மற்றும் 9 ஆண்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஊட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய சவுரிபாளையத்தை சேர்ந்த 34 வயது பெண் செவிலியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமானம் மூலம் வந்த காளப்பட்டியை சேர்ந்த 24 வயது பெண், மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக வந்த ஹோப் காலேஜ் பகுதியை சேர்ந்த 53 வயது பெண்ணிற்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த 54 வயது ஆண், காட்டூரை சேர்ந்த 66 வயது ஆணிற்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், சரவணம்பட்டியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை மற்றும் தெலுங்குபாளையத்தை சேர்ந்த 4 வயது பெண் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. டவுன்ஹாலை சேர்ந்த 27 வயது, கோட்டூரை சேர்ந்த 23 வயது பெண் காவலர், வடவள்ளியை சேர்ந்த 69 வயது ஆண், ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 31 வயது ஆண், கரடிமடையை சேர்ந்த 35 வயது ஆணிற்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதேபோல ஒண்டிபுதூரை சேர்ந்த 60 வயது ஆண், சவுரிபாளையத்தை சேர்ந்த 35 வயது ஆண், பிஎல்எஸ் நகரை சேர்ந்த 49 வயது ஆண் மற்றும் 59 வயது பெண்ணிற்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனிடையே, கோவையில் கொரோனா பாதிப்பு 300 ஐ கடந்துள்ளது. கடந்த 24 நாட்களில் 168 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.